இந்தியாவிற்கு எதிரான 2வது டெஸ்ட்... தென் ஆப்ரிக்கா வெற்றி..

By செந்தில் வேல் – January 7, 2022

4394

Share E-Tamil Newsதென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. செஞ்சுரியனில் நடந்த முதல் டெஸ்டில் வெற்றி பெற்ற இந்தியா 1-0 என தொடரில் முன்னிலையில் இருந்தது.  இரண்டாவது டெஸ்ட், ஜோகனஸ்பர்க் மைதானத்தில் நடந்தது. முதல் இன்னிங்சில் இந்தியா 202, தென் ஆப்ரிக்கா 229 ரன் எடுத்தன. இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 266 ரன் எடுத்தது. மூன்றாவது நாள் முடிவில் தென் ஆப்ரிக்க அணி இரண்டாவது இன்னிங்சில் 2 விக்கெட்டுக்கு 118 ரன் எடுத்திருந்தது. எல்கர் (46), வான்டெர் துசென் (11) அவுட்டாகாமல் இருந்தனர். நேற்று நான்காவது நாள் ஆட்டம் நடந்தது. கைவசம் 8 விக்கெட்டுகள் வைத்திருந்த தென் ஆப்ரிக்க அணியின் வெற்றிக்கு, 122 ரன் மட்டுமே தேவைப்பட்டன. ஆனால் காலையில் இருந்து மோசமான வானிலை, மழை காரணமாக 5 மணி நேரம், 45 நிமிடம் தாமதமாக போட்டி துவங்கியது. நேற்று வீசப்பட்ட முதல் 11.1 ஓவரில் 55 ரன்கள் குவித்த தென் ஆப்ரிக்கா வெற்றியை வேகமாக நெருங்கியது. இறுதியில் தென் ஆப்ரிக்க அணி இரண்டாவது இன்னிங்சில் 3 விக்கெட்டுக்கு 243 ரன் எடுத்து, 7 விக்கெட்டில் வெற்றி பெற்றது. 309 நிமிடங்கள் பேட்டிங் செய்த எல்கர் (96), பவுமா (23) அவுட்டாகாமல் இருந்தனர்.

 

© E-Tamil News. All Rights Reserved. Design by IZone Technologies