இன்ஸ்பெக்டருககாக 2 பெண்கள் குடுமிபிடி சண்டை... நாறிப்போனது போலீஸ் குடியிருப்பு..

By செந்தில்வேல் – January 3, 2022

1150

Share E-Tamil Newsசேலம் மாநகர போலீசில் சிறப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் ஒருவர்  அன்னதானப்பட்டி போலீஸ் குடியிருப்பில் தனியாக வசித்து வருகிறார். இதனால் அவரது வீட்டிற்கு அவ்வப்போது பெண்கள் வந்து செல்வதாக கூறப்படுகிறது. இந்நிலையில், புத்தாண்டை யொட்டி வீட்டில் இன்ஸ்பெக்டர் இருந்துள்ளார். அப்போது, ஒரு இளம்பெண் வீட்டிற்கு வந்துள்ளார். அங்கு இருவரும் தனிமையில் இருந்த நிலையில், திடீரென அந்த இன்ஸ்பெக்டருக்கு தெரிந்த மற்றொரு இளம்பெண் வீட்டிற்குள் வந்துள்ளார். வீட்டிற்குள் இன்ஸ்பெக்டர் இளம்பெண்ணுடன் இருப்பதை பார்த்து அப்பெண் அதிர்ச்சி அடைந்துள்ளார். அவர், எப்படி நீ இங்கு வரலாம் என அந்த பெண்ணிடம் கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார். இன்ஸ்பெக்டர் எனக்குத் தான் சொந்தம் என்று ஒருவருக்கொருவர் குடுமிப்பிடி சண்டை போட்டுள்ளனர். ஒருவருக்கொருவர் சத்தமாக திட்டி சத்தம் போட்டதால், பக்கத்து வீடுகளில் வசிக்கும் காவலர்களின் குடும்பத்தினர் அங்கு வந்தனர். அப்போது செய்வதறியாது திகைத்த இன்ஸ்பெக்டர், சண்டையை நிறுத்தி விட்டு  இடத்தை காலி செய்யுங்கள் என்று கூறி இருவரையும் சமாதானப்படுத்தியுள்ளார்.

 

இதனிடையே இந்த விவகாரம் குறித்து அன்னதானப்பட்டி போலீசாருக்கு குடியிருப்புவாசிகள் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து சென்று இன்ஸ்பெக்டருக்காக குடுமிப்பிடி சண்டை போட்ட 2 இளம்பெண்களையும் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றனர். 

 

இச்சம்பவம் குறித்து மாநகர போலீஸ் கமிஷனர் நஜ்முல்கோடாவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் விசாரணைக்கு உத்தரவிட்டார். இதன் பேரில், துணை கமிஷனர் மோகன்ராஜ், உதவி கமிஷனர் அசோகன் விசாரணை நடத்தி வருகின்றனர். வீட்டிற்கு இளம்பெண்களை அழைத்து புத்தாண்டு கொண்டாட இருந்த இன்ஸ்பெக்டர் மீது துறை ரீதியான நடவடிக்கை பாயும் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

© E-Tamil News. All Rights Reserved. Design by IZone Technologies