அழுகிய சத்துணவு முட்டை..  தலைமை ஆசிரியர் உள்ளிட்ட 3 பேர் சஸ்பெண்ட்..

By senthil – December 28, 2021

4398

Share E-Tamil Newsகரூர் மாவட்டம் குளித்தலை அருகே தோகைமலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட நாகனூர் ஊராட்சி பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது, இப்பள்ளியில் மதிய உணவில் வழங்கும் முட்டையில் கெட்டுப்போய், புழு வைத்துள்ளதாக பள்ளி மாணவர்கள் பெற்றோர்களிடம் கூறியதை தொடர்ந்து பள்ளியின் மேலாண்மை குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பள்ளியில் சென்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்ததில் முட்டைகளில் புழு மற்றும் துர்நாற்றம் வீசிய முட்டைகளை கண்டறிந்தும், நடவடிக்கை எடுக்க தோகைமலை வட்டார வளர்ச்சி அலுவலரிடம் தெரிவித்துள்ளனர், இது குறித்து நேற்றைய etamilnews.comல் வீடியோவுடன் செய்தி வெளியானது..

இந்த நிலையில் இன்று மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் நேரில் சென்று நாகனூர் அரசு துவக்கப்பள்ளி சத்துணவு மையத்தில் ஆய்மேற்கொண்டார். அப்போது முட்டைகள் நன்றாக இருந்துள்ளது. சத்துணவு அமைப்பாளர் சென்ற வாரம் பெறப்பட்ட சில முட்டைகளை ஒரு வாரத்திற்கும் மேலாக காலம் கடந்தும் அப்புறப்படுத்த தவறியதால் சில முட்டைகள் அழுகியது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதன் அடிப்படையில்  அலட்சியமாக செயல்பட்ட சத்துணவு அமைப்பாளர் தேன்மொழி, உதவியாளர் தேவி மற்றும் பள்ளி தலைமை ஆசிரியை தனலட்சுமி ஆகியோரை சஸ்பெண்ட் செய்து கலெக்டர் சங்கர் உத்தரவிட்டுள்ளார்.

© E-Tamil News. All Rights Reserved. Design by IZone Technologies