By senthil – December 28, 2021
Share E-Tamil News
திருச்சியில் கடந்த 23 ஆம் தேதி நள்ளிரவு இ.பி. ரோடு பகுதியில் நின்று கொண்டிருந்த லாரிகளை திருச்சி காந்திமார்கெட், கோட்டை காவல்துறையினா் இணைந்து அதிரடியாக சோதனை செய்தனா். இந்த சோதனையில் குட்கா உள்ளிட்ட போதை வஸ்துக்கள் 22 மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
முக்கிய நகரங்களில் இருந்து இயக்கப்பட்டு வுரும் வி.ஆர்.எல் பார்சல் நிறுவனத்திற்கு சொந்தமான லாரியில் பெங்களுரில் இருந்து திருச்சிக்கு மூட்டை மூட்டையாக குட்கா உள்ளிட்ட பொருட்கள் கொண்டு வரப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்றதாக கூறப்பட்டது. இந்த குட்கா பார்சல் கொண்டுவரப்படுவது முதல் முறை அல்ல என்பதும் இது வழக்கமாக வரக்கூடியது தான் என்கிற திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.. இது குறித்து போலீசார் தரப்பில் கூறப்படுவதாவது... வட மாநிலங்களில் இருந்து ஆந்திரா, கர்நாடகா வழியாக குட்கா கொண்டு வரப்படுகிறது. இதற்கென ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு புரோக்கர் உள்ளார். மாவட்டத்தின் ஒரு பகுதிக்கு வந்தவுடன் அவை சில்லறை விற்பனையாளர்களுக்கு கொண்டு செல்லப்பட்டு விடும். . இதற்காக புறநகர் பகுதிகளில் குடோன்கள் உள்ளன. இந்தமுறை புறநகர் பகுதிகளில் உள்ள போலீசார் மூலம் தகவல் கொடுக்கப்பட்டு குட்கா மூட்டைகள் சிக்கியுள்ளதாக தெரிகிறது. மேலும் இதேப்போன்ற மூட்டைகள் 15 நாட்களுக்கு ஒரு முறை வருவது வழக்கம் தானாம். பிடிச்சவங்கல்ல ஆரம்பிச்சு போலீசில் எல்லா பிரிவிற்கும் இது தெரியுமாம்... .. இவ்வளவு ஏன் நிருபர்கள் சிலருக்கும் கூட தகவல் தெரியுமாம்.. கேட்டகிரிக்கு தகுந்தால் போல் குட்கா சேட்டுகள் மூலம் இவர்கள் அனைவருக்கும் மாதா மாதம் "கவனிப்பு"ம் இருக்கிறது என்கின்றனர் விபரம் தெரிந்த போலீசார்..
© E-Tamil News. All Rights Reserved. Design by IZone Technologies