திருச்சி ஐயப்பனுக்கு காவேரியில் ஆராட்டு.... படங்கள்...

By செந்தில்வேல் – November 24, 2022

314

Share E-Tamil Newsதிருச்சியில் பிரசித்தி பெற்று விளங்கும் ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை விழா கடந்த 19ம் தேதி தொடங்கியது. விழா வரும் டிசம்பர் 27ம் தேதி வரை நடைபெறுகிறது.திருச்சி ஐயப்ப சங்கம் சார்பில். மேஜர் சரவணன் சாலையில் உள்ள ஐயப்பன் கோயிலில் 38வது மண்டல பூஜை தொடங்கியுள்ளது சுவாமிக்கு பிரம்மோத்ஸவ பூஜை கடந்த 19ம் தேதி (சனிக்கிழமை) தொடங்கியது. அன்றைய தினம் மகா அன்னதானம் நடந்தது. பல்லாயிரகணக்கான பக்தர்கள் இதில் பங்கேற்றனர். அன்று மாலை கொடியேற்றம் நடந்தது. இரவில் வலம்புரி சங்கு பூங்வாக பூஜைகள் நடந்தது. இதனை தொடர்ந்து திங்கட்கிழமை சங்காபிஷேகம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இந்த விழா இன்று மாலை 4 மணியளவில் திருச்சி ஜயப்பன் கோவிலில் இருந்து பகவான் ஸ்ரீ

4

அய்யப்பன் முருங்கப்போட்டை அருள் மிகு ஸ்ரீ அடைக்கலம் காத்த அம்மன் கோவிலில் உள்ள படித்துறையில் அய்யப்பன் ஆராட்டு நிகழ்வு நடைபெற்றது. அனைவரும் கலந்து கொண்டு அய்யன் அருள் பெருக சாமியே சரணம் ஐயப்பா என்று வழிப்பட்டனர். இவ்விழா இன்றுடன் நிறைவு பெற்றது.வரும் 27ம் தேதி வித்யா கணபதி ஹோமம், தாரணா சரஸ்வதி ஹோமம், தட்சிணாமூர்த்தி ஹோமம் பூர்வாங்க பூஜை நடைபெறுகிறது.