பாஜ பெண் நிர்வாகியிடம் ஆபாசமாக பேசிய விவகாரம்.. திருச்சி சூர்யா சிவாவிடம் விசாரணை..

By செந்தில்வேல் – November 24, 2022

372

Share E-Tamil Newsதமிழக பாஜகவின் சிறுபான்மை பிரிவு தலைவர் டெய்சி மற்றும் ஓபிசி பிரிவு மாநில பொதுசெயலாளர் திருச்சி சூர்யா சிவா இருவரும் செல்போனில்  கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதில் சூர்யாசிவா தரக்குறைவாகவும், ஆபாசமாக பேசியதும் இது தொடர்பான ஆடியோ வைரலானது. இதற்கிடையே, இந்தச் சம்பவம் தொடர்பாக இருவரிடமும் விசாரணை நடத்தப்படும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியிருந்தார். இந்த விவகாரம் குறித்து விசாரணை குழு அமைக்கப்பட்டது. இதனிடையே இன்று திருப்பூர் பல்லடம் சாலையில் உள்ள வடக்கு மாவட்ட பாஜக அலுவலகத்தில்  பாஜக மாநில துணைத்தலைவர் கனக சபாபதி, மாநில செயலாளர் மலர்கொடி ஆகியோர் டெய்ஸி மற்றும் திருச்சி சூர்யா ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். அவர்களிடம் தனித்தனியாக விசாரணை நடந்தது. இந்த விசாரணை அறிக்கை தலைமைக்கு அனுப்பப்படும் என விசாரணைக் குழுவினர் தெரிவித்தனர்.