சீர்காழியில் மழை நிவாரணம் ரூ.1000..... கலெக்டர் இன்று வழங்கினார்

By செந்தில்வேல் – November 24, 2022

66

Share E-Tamil Newsமயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி மற்றும் தரங்கம்பாடி தாலுகாக்களில்  கடந்த 10 தினங்களுக்கு முன் வரலாறு காணாத கனமழை பெய்தது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.  மழை சேதத்தை கடந்த 14ம் தேதி முதல்வர் மு.க. ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது மழையால் பாதிக்கப்பட்ட சீர்காழி, தரங்கம்பாடி தாலுகாவில் உள்ள அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் மழை பாதிப்பு நிவாரணமாக ரூ.1000 வழங்கப்படும் என அறிவித்தார்.அதன்படி 2 தாலுகாக்களில்  உள்ள1,51,647 குடும்ப அட்டைகளுக்கு தலா ரூ.1000 வீதம்   இன்று முதல் வழங்கப்படுகிறது.  .

இந்த நிவாரணத்தை குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கும் நிகழ்ச்சியை மணிக்கிராமம் நியாயவிலை கடையில் இன்று  கலெக்டர்  லலிதா  தொடங்கி வைத்தார். இதில் எம்.எல்.ஏக்கள்  நிவேதா முருகன், பன்னீர்செல்வம், மாவட்ட பஞ்சாயத்து  தலைவர் உமாமகேஸ்வரி,  மற்றும் கூட்டுறவுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.