சுட சுட காலியாகும் முட்டை போண்டா ஒரு முறை இப்படி செஞ்சுபாருங்க....

By senthil – December 31, 2021

272

Share E-Tamil News



மாலை நேர சூடான டீயுடன் மொறு மொறுப்பான ஸ்நாக்ஸ் செய்து சாப்பிடுவது பலரது வீட்டில் பின்பற்றப்படும் ஒன்றாகும். அதிலும் குளிர் காலத்தில் சொல்லவே வேண்டாம். அப்படி நாம் செய்யும் ஸ்நாக்ஸ் ருசியாக இருக்க வேண்டும் என்பது ஒரு புறம் இருந்தாலும், அது ஆரோக்கியமானதாகவும் இருத்தல் அவசியம். அப்படி ஒரு ஆரோக்கியமான, அதே சமயம் சுவையான ஸ்நாக்ஸ் ரெசிபி தான் இன்று நாம் பார்க்க போவது. அந்த வகையில் இப்போது நாம் முட்டை போண்டா எப்படி செய்வது என பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:
வேக வைத்த முட்டை
மஞ்சள் தூள்- 1/4 தேக்கரண்டி
மிளகாய் தூள்- 1 தேக்கரண்டி
மிளகுத்தூள்- 1/2 தேக்கரண்டி
உப்பு- தேவையான அளவு
எண்ணெய்- பொரிக்க தேவையான அளவு

 

மாவு தயார் செய்ய:
கடலை மாவு- 1/4 கப்
அரிசி மாவு- 2 தேக்கரண்டி
மிளகாய் தூள்- 1 தேக்கரண்டி
மிளகுத்தூள்- 1/2 தேக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது- 1 தேக்கரண்டி
தண்ணீர்

செய்முறை:
*ஒரு தட்டு எடுத்து அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மிளகுத்தூள் மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்த்து ஒன்றாக கலந்து கொள்ளவும். 

*இப்போது வேக வைத்த முட்டையை ஆங்காங்கே கீறி இந்த மசாலாவில் பிரட்டவும்.

*பின்னர் ஒரு அகலமான பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய் தூள், மிளகுத்தூள், உப்பு, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து கலக்கவும்.

*இதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கலந்து கொள்ளவும்.

*இப்போது மசாலாவில் பிரட்டிய முட்டையை மாவில் தோய்த்து எடுக்கவும்.

*கடாயில் எண்ணெய் ஊற்றி முட்டையை போட்டு பொரித்து எடுக்கவும்.

*அவ்வளவு தான்… சுவையான முட்டை போண்டா தயார்.

© E-Tamil News. All Rights Reserved. Design by IZone Technologies