விஜய் படத்தின் சாதனையை முறியடித்த பொன்னியின் செல்வன்....

By senthilvel – September 27, 2022

4444

Share E-Tamil Newsமணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் வெளியாக இன்னும் மூன்று நாட்களே உள்ளது. அமெரிக்காவில் வெளியீட்டுக்கு முந்தைய வணிகத்தில் ‘பொன்னியின் செல்வன்’ சாதனை படைத்துள்ளது. இது தொடர்பாக வர்த்தக ஆய்வாளர் ரமேஷ் பாலா கூறுகையில், அமெரிக்காவில் நடிகர் விஜயின் ‘பீஸ்ட்’ படத்தின் முன் வெளியீட்டு விற்பனையை ‘பொன்னியின் செல்வன்’ முறியடித்துள்ளது. இதே வேகத்தில் இப்படம் கமல்ஹாசனின் ‘விக்ரம்’ படத்தின் சாதனையையும் முறியடிக்க வாய்ப்புள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.