தமிழக நிதி அமைச்சருக்கு திருச்சி என்ஐடியில் தலைசிறந்த விருது.....

By senthilvel – September 27, 2022

4444

Share E-Tamil Newsதிருச்சி துவாக்குடியில் உள்ள தேசிய தொழில் நுட்ப கல்லுாரி, தலைசிறந்து விளங்கும் முன்னாள் மாணவர்களுக்கும், இளம் சாதனையாளர்களுக்கும் விருது வழங்கி உள்ளது. இதில் பொது நிர்வாகத்தில் மேன்மை என்ற பிரிவில் தலைசிறந்து விளங்கும், தமிழக நிதித்துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கும், இளம் சாதனையாளர் விருது அமெரிக்க ராணுவத்தின் தலைமை தகவல் அதிகாரி ராஜ் அய்யருக்கும் வழங்கப்பட்டது. இதே போல கல்விசார் ஆய்வு, புதுமை கண்டுபிடிப்பு, பெருநிறுவனம் மற்றும் தொழிற்சாலை, தொழில் முனைவோர் முயற்சி, சமூக சேவை ஆகிய பிரிவுகளிலும் விருதுகள் வழங்கப்பட்டது. இந்த விருதுகள் வழங்கும் விழாவில் கல்லுாரி நிர்வாக குழு தலைவர் பாஸ்கர் பட், இந்திய மேலாண்மை கல்லுாரி திருச்சி இயக்குனர் பவன்குமார் சிங், என்ஐடி இயக்குனர் அகிலா, முன்னாள் மாணவர்கள் சங்க தலைவர் மஹாலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.