பாய் பிரண்டுகள் வாடகைக்கு.... பெங்களூரில் கலக்கும் டாய்பாய் செயலி...

By செந்தில்வேல் – September 27, 2022

4436

Share E-Tamil News நாம் தனிமையாக உணர்ந்தால் அல்லது ஏதாவது ஒரு பிரச்சனையை எதிர்கொண்டிருந்தால் நாம் முதலில் தேடுவதும் நண்பர்களைதான். அவர்களுடன் வெளியே சென்று ஊர் சுற்றிவிட்டு வந்தால் நாம் சற்று லேசாக உணர்வோம். யார் என்று தெரியாத ஒரு நண்பரை வாடகைக்கு எடுத்து ஊர் சுற்றுவீர்களா? அப்படி செய்தால் உங்கள் மனஅழுத்தம் குறையுமா? இது ஒரு விசித்திரமான கேள்விதான். ஆம். நாம் வாழ்ந்து கொண்டிருப்பது தொழில்நுட்ப யுகத்தில் என்பதை மறந்து விடாதீர்கள். பாய் பிரண்டுகளை பெண்கள் வாடகைக்கு எடுத்துக்கொள்ள முடியும் என்றால் நம்புவீர்களா? அந்த வகையில், பெங்களூரில் பாய் பிரண்டுகளை வாடகைக்கு எடுக்கும் டாய்பாய் எனப்படும் போர்ட்டல் திறக்கப்பட்டுள்ளது. காதலனால் ஏமாற்றப்பட்டு தனிமையில் மன அழுத்தத்தில் இருக்கும் பெண்கள் பேசுவதற்கு ஆண் நண்பர்கள் தேவை என்றால் இந்த போர்ட்டல் மூலம் புக் செய்து கொள்ளலாம். இன்ஸ்டாகிராம் மூலம் தொடர்பு கொண்டு டாய்பாய் போர்ட்டலுக்கான ஏபிகே பைலை பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. . இது தற்போது பெங்களூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.