ராஜீவ் கொலை வழக்கில் நளினி மனு ....... மத்திய, மாநில அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்

By செந்தில்வேல் – September 26, 2022

4444

Share E-Tamil Newsமுன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் நளினி மற்றும் ரவிச்சந்திரன் ஆகியோர் 142 வது சட்டப்பிரிவின் மூலமாக  பேரறிவாளனை போன்று தங்களையும் விடுவிக்க கோரியும் சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது. அதனை தொடர்ந்து நளினி மற்றும் ரவிச்சந்திரன் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர். இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் நளினி, ரவிச்சந்திரன் விடுதலை தொடர்பாக அளித்த மனு மீது மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.