பதட்டத்தை ஏற்படுத்த வேண்டாமே.. அமைச்சர் செந்தில் பாலாஜி வேண்டுகோள்..

By செந்தில்வேல் – September 25, 2022

4436

Share E-Tamil Newsஉலக பிசியோதெரபி தினத்தையொட்டி  கோவை மண்டல அளவிலான அறிவியல் மையம் மற்றும் அறிவியல் அருங்காட்சியத்தில் தமிழ்நாடு பிசியோதெரபி மருத்துவர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி சென்னையை சேர்ந்த டாக்டர்.ஜெகதீசனுக்கு  அப்துல்கலாம் விருதினையும் . டாக்டர்.ரகுநாத்திற்கு இளம் சாதனையாளர் விருதினையும், கன்னியாகுமரியை சேர்ந்த டாக்டர்.ஆல்டரின் பிக்னாவிற்கு சிறந்த பிஸியோதெரபி மருத்துவர் விருதினையும் வழங்கினார். அதன் பின்னர் அமைச்சர் செந்தில்பாலாஜி நிருபர்களிடம் கூறியதாவது.... பிசியோதெரபி சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துனர். அவற்றை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்  மூலம் முதல்வரின் கவனத்துக்கு கொண்டு அவற்றை நிறைவேற்றுவதற்கு ஆவண செய்யப்படும். கோவையில் பாரதீய ஜனதா கட்சியினர் எதற்காக கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது அனைவருக்கும் நன்றாக தெரியும். கோரிக்கைககள் இருந்தால் பாஜகவினர் மாவட்ட ஆட்சியர் அல்லது காவல் துறை அதிகாரிகளிடம்   முன் வைக்கலாம். ஆனால் அதை விட்டு விட்டு சாலை மறியலில் ஈடுபடுவது சட்டம் - ஒழுங்கை சீர்குலைப்பதில் ஈடுபட்டவர்களை மட்டுமே காவல் துறையினர் கைது செய்துள்ளனர். சமூக வலைதளங்களில் கோவையில் ஏதோ ஒரு  பதற்றமான சூழ்நிலை நிலவுவது போல தகவல்கள் பரவுகின்றன.  கோவையில் எந்த அசம்பாவித சம்பவங்களும் நடக்கவில்லை. மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாதவாறு மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து  வருகிறது. இவ்வாறு அமைச்சர் செந்தில்பாலாஜி கூறினார்.