நடிகர் போண்டாமணிக்கு உதவுவேன்..... திருச்செந்தூரில் நடிகர் வடிவேலு பேட்டி

By செந்தில்வேல் – September 23, 2022

120

Share E-Tamil Newsதூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் அமைந்துள்ள முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பிரபல நகைச்சுவை நடிகர் வடிவேலு நேற்று மாலை சாமி தரிசனம் செய்தார்.

அதன்பின்னர் கோயில் வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய வடிவேலு, நடிகர் போண்டாமணிக்கு என்னால் இயன்ற உதவியை செய்வேன், நல்லமனிதர்.  அவருக்கு உதவுவேன். நாய் சேகர் ரிட்டன், மாமன்னன் , சந்திரமுகி 2 உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறேன். இப்போதெல்லாம் காமெடி தனி டிராக்காக வருவதில்லை. நானே இப்போது கதையோடு ஒன்றிய  காமெடியில் தான் நடிக்கிறேன்.மாமன்னன் படத்தில் குணச்சத்திர வேடத்தில் தான் நடிக்கிறேன். கதை அருமையாக உள்ளது. 

 அரசியல் நமக்கு தேவையில்லை. சினிமாவில் இருந்து கொண்டே மக்களுக்கு நன்மை செய்யலாம். தமிழக அரசின் ஆட்சி நன்றாக உள்ளது 

இவ்வாறு அவர் கூறினார்.