அக்கவுண்ட்டில் ரூ.1¼ கோடி அபேஸ்.. வங்கியின் பெண் மேனேஜர் -கணவர் கைது

By senthilvel – September 23, 2022

298

Share E-Tamil Newsசென்னை பஞ்சாப் சிந்த் வங்கியின் மண்டல மேலாளர் கன்வர்லால் என்பவர் போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவாலிடம் அளித்த புகார் ஒன்றில் ... சென்னை அண்ணாசாலை மற்றும் ஜார்ஜ் டவுண் பஞ்சாப் சிந்த் வங்கி கிளைகளில் மேலாளராக 2016-முதல் 2019 வரை பணிபுரிந்தவர் நிர்மலா ராணி (59).இவர், தான் மேலாளராக பணியாற்றிய கால கட்டத்தில் அந்த வங்கி கிளைகளில் வாடிக்கையாளர்களின் நிரந்தர வைப்பு தொகை கணக்கில் இருந்து, தனது இஷ்டத்துக்கு தன்னுடைய கர்நாடக வங்கி கணக்கிற்கு ரூ.1.23 கோடியை மாற்றியுள்ளார். பின்னர் இந்த பணத்தை தனது கணவர் இளங்கோவனின் வங்கி கணக்கிற்கு மாற்றி ஏ.டி.எம். மூலம் பணத்தை எடுத்து மோசடியில் ஈடுபட்டுள்ளார். அவர் மீதும், அவரது கணவர் மீதும் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டது. இதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு கமிஷனர் சங்கர்ஜிவால் உத்தரவிட்டார். இதன் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு தனிப்படை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மேலாளர் நிர்மலா ராணி, அவரது கணவர் இளங்கோவன் ஆகியோரை கைது செய்துதனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.