திருச்சி தொழிலாளி அரபு நாட்டில் மர்ம சாவு..... உடலை பெற்றுத்தர மனைவி கோரிக்கை

By செந்தில்வேல் – September 13, 2022

126

Share E-Tamil Newsதிருச்சி  மாவட்டம் வாத்தலை அருகே உள்ள  வடக்கு சித்தாம்பூரை சேர்ந்தவர் சின்னமுத்து புரவியான்(52), இவரது மனைவி அன்னக்கிளி, இவர்களது மகள்  நிவேதா, பிளஸ் 2  படித்து வருகிறார்.   சின்னமுத்து பல வருடங்களாக வெளிநாடுகளில் வேலை செய்து வந்தார்.   கடந்த 4 மாதங்களுக்கு €முன் சவுதி அரேபியாவுக்கு  வெல்டர் வேலைக்கு சென்றார். 

 கடந்த 8ம் தேதி  அன்னக்கிளி வெளிநாட்டில் உள்ள தனது கணவரிடம் போனில் பேச தொடர்பு கொண்டார். அப்போது அவர் வேலை செய்த நிறுவனத்தை சேர்ந்த ஒருவர் பேசினார். அவர் சின்னமுத்துவை காணவில்லை என்று கூறினாராம். மறுநாள் பேசும்போது அவர்  உடல் நலமின்றி  ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். சிறிது நேரத்தில் அவர் இறந்து விட்டதாக கூறி உள்ளனர்.

இதை கேட்ட அன்னக்கிளி கதறி துடித்தார். தனது கணவர் எப்படி இறந்தார்.  அவர் சாவில் மர்மம் உள்ளது. உடலை   கொண்டு வர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என  வலியுறுத்தி நேற்று  அன்னக்கிளியும், அவரது மகளும்  திருச்சி கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.