By senthilvel – January 25, 2022
Share E-Tamil News
மொழிப்போர் தியாகிகள் தினத்தை முன்னிட்டு திருச்சி உழவர் சந்தையில் தியாகிகள் பழுவூர் சின்னச்சாமி, விராலிமலை சண்முகம் நினைவிடத்தில் மக்கள் கலை இலக்கியக் கழகம் அமைப்பின் மாவட்ட செயலாளர் ஜீவா தலைமையில் பொதுநல அமைப்புகள் பெரியாரிய முற்போக்கு இயக்கங்கள் ஊர்வலமாக சென்று அஞ்சலி நிகழ்ச்சி நடத்தினோம்..இதில் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் தமிழ் மொழி காத்த வீரர்களுக்கும், இந்தி மொழி, சமஸ்கிருத திணிப்பு எதிர்த்துப் போராட வேண்டும், மொழி உரிமை மாநில
உரிமையை பாதுகாக்க வேண்டும் ஆகிய கோஷங்கள் எழுப்பப்பட்டன. கப்பலோட்டிய தமிழன் வ உ சிதம்பரம், வீரமங்கை வேலுநாச்சியார்,தீரன் சின்னமலை, சின்ன மருது ,பெரிய மருது போன்ற விடுதலைப் போராட்ட வீரர்களை போல ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் வேடமணிந்து வந்தனர். பின்னர் மொழிப்போர் தியாகிகள் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது.