By senthilvel – January 25, 2022
Share E-Tamil News
விஜய் பீஸ்ட் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ளார். கொரோனா பரவல் காரணமாக பீஸ்ட் படம் திரைக்கு வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அடுத்து விஜய் தனது 66-வது படத்தில் நடிக்க தயாராகி உள்ளார். இந்த படத்தை பிரபல தெலுங்கு டைரக்டர் வம்சி இயக்குகிறார். இவர் தமிழ், தெலுங்கில் வெளியான தோழா மற்றும் தெலுங்கில் மகேஷ் பாபு நடித்த மஹரிஷி, ராம்சரண் நடித்த எவடு உள்ளிட்ட படங்களை டைரக்டு செய்துள்ளார். விஜய்யின் 66-வது படம் குறித்து அந்த படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு தெலுங்கு தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில், ‘இந்த படத்தின் கதையை கேட்ட விஜய்
கடந்த 20 வருடங்களில் இப்படி ஒரு கதையை நான் கேட்கவில்லை. இந்த படம் எனக்கு மிக முக்கியமான படமாக இருக்கும் என்று நெகிழ்ச்சியோடு கூறினார். இந்த படத்தின் படப்பிடிப்பை வரும் மார்ச் மாதம் தொடங்க திட்டமிட்டு உள்ளோம். படத்தை தீபாவளி அல்லது அடுத்த ஆண்டு பொங்கலுக்கு திரைக்கு கொண்டு வருவோம்'' என்றார்.