தஞ்சையில் எம்ஜிஆர் சிலையை உடைத்த ஆசாமி கைது......

By senthilvel – January 25, 2022

534

Share E-Tamil Newsதஞ்சை வடக்குவீதியில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரின் மார்பளவு சிலை உள்ளது. இன்று காலை அப்பகுதியில் உள்ள டீக்கடைக்காரர் கடையை திறக்க வந்த போது எம்ஜிஆர் சிலையை காணவில்லை. தகவல் அறிந்த அ.தி.மு.க.வினர் ஏராளமானோர் திரண்டனர். இதனால் அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவியது. அதன் பின்பு பின்புறம் கிடந்த எம்ஜிஆர் சிலையை எடுத்து அதே இடத்தில் நிறுவப்பட்டது.  சிலையை உடைத்தவர்கள் மீது  எடுக்கக்கோரி அ.தி.மு.க.வினர் தஞ்சை மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமிரா பதிவை கொண்டு நடத்தப்பட்ட விசாரணையில் போதை ஆசாமி ஒருவர் எம்ஜிஆா் சிலையை உடைத்து எடுத்து செல்வது தொிய வந்தது. இதனை வைத்து போலீசார் நடத்திய தொடர் விசாரணையில் தஞ்சை வடக்குவாசல் கல்லறைமேட்டு தெருவை சேர்ந்த சேகர் ( 40) என்பவர் கைது செய்யப்பட்டு உள்ளார். அவர்...குடிபோதையில் சிலையை பெயர்த்து வீசி சென்றதாக போலீசாரிடம் தொிவித்துள்ளார்.