திருச்சி ரயில்வே ஜங்ஷனில் மோப்பநாய் உதவியுடன் தீவிர வெடிகுண்டு சோதனை......

By senthilvel – January 24, 2022

534

Share E-Tamil Newsஇந்திய திருநாட்டின் 73வது குடியரசு தினம் 26ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. தமிழகத்திலும் அனைத்து பகுதிகளிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. இதன் ஒரு பகுதியாக திருச்சியின் முக்கிய இடங்களிலும் பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டு உள்ளது. திருச்சி விமான நிலையத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. மேலும் திருச்சியில் உள்ள முக்கிய கோயில்கள், பாலங்கள், முக்கிய சாலைகளின் சந்திப்புகள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். திருச்சி

ரயில்வே ஜங்ஷனில் ரயில்வே பாதுகாப்பு படையினரும், ரயில்வே போலீசாரும் தீவிர பாதுகாப்பு, கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். திருச்சி ரயில்வே ஜங்ஷனில் இருந்து புறப்படும், வந்து செல்லும் அனைத்து ரயில்களிலும் மெட்டல் டிடெக்டர், மோப்ப நாய் உதவியுடன் சோதனை நடைபெறகிறது. மேலும் ஜங்ஷனுக்கு வரும் அனைத்து பயணிகளின் உடமைகளும் சோதனைக்கு உட்படுத்தப்படுகிறது. பார்சல் ஆபீஸ்க்கு வரும் அனைத்து பார்சல்களும் மெட்டல் டிடெக்டர் உதவியுடன் சோதனைக்கு உட்படுத்தப்படுகிறது. பிளாட்பாரம், வாகனங்கள் நிறுத்தும் இடங்களிலும், தீவிர சோதனை மற்றும் கண்காணிப்பு பணி நடைபெறுகிறது.