மூத்த நடிகர்களுடன் நடிப்பதை விமர்சிக்கிறார்கள்....

By senthil – January 24, 2022

534

Share E-Tamil Newsதமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை சுருதிஹாசன். இவர் பாடகராகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார். தற்போது அவர் நடிகர் சிரஞ்சீவி, நடிகர் பாலகிருஷ்ணா போன்ற பல மூத்த நடிகர்களுடனும் இணைந்து நடிக்கிறார். இந்நிலையில் அவர் மூத்த நடிகர்களுடன் நடிப்பதை சிலர் விமர்சனம் செய்ததாக கூறப்படுகிறது. இதற்கு சுருதிஹாசன் வருத்தம் தெரிவித்துள்ளார்.

சுருதிஹாசன் கூறியதாவது.... “நானும் என் நண்பர் சந்தனுவும் காதலை வெளிப்படுத்திக் கொண்டோம். அதை இன்னொரு கட்டத்திற்கு கொண்டு செல்லும் எண்ணம் இப்போது இல்லை. காதல் திருமணம் போன்ற விஷயங்களைப் பேசுவதில் எனக்கு இஷ்டம் இல்லை. சினிமாவிற்கு வந்த புதிதில் நடிப்பு, சினிமா பற்றி ஒன்றுமே தெரியவில்லை. அப்போது நான் இசைத்துறையில் மட்டுமே இருந்தேன்.Shruti Haasan gets cosy with boyfriend Santanu Hazarika as they get locked  down – view pics

எதிர்பாராமல் நடிகையாக மாற வேண்டியிருந்தது. நானும் இத்தனை ஆண்டுகளாக சினிமாவில் இருக்கிறேன் என்றால் ஆச்சரியம்தான். நடிகர் சிரஞ்சீவி,  நடிகர் பாலகிருஷ்ணா போன்ற மூத்த கதாநாயகர்களுடன் சேர்ந்து நடிக்க ஒப்புக்கொண்டதை சிலர் விமர்சிக்கின்றனர். கதை, கதாபாத்திரம் பிடித்தால் மூத்த நடிகர்களுடன் இணைந்து நடிப்பேன். நான் சினிமாவில் புதிய முயற்சிகள் செய்யும் ஒவ்வொரு முறையும் எத்தனையோ சந்தேகங்களை வெளிப்படுத்தி என்னை பயமுறுத்தினார்கள். நான் பயப்படாமல் எதை செய்ய வேண்டுமோ அதையே செய்தேன். பாலகிருஷ்ணா படத்தில் ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்கிறேன்'' என்றார்.